About Vedhajothidam
ஜோதிடம் - ஒரு வாழ்வியல் கல்வி. எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுவதல்ல ஜோதிடம். மாறாக எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒவ்வொருவரும் அவர்அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படி தான் இப்பிறவியை எடுத்துள்ளோம். நாம் வரும்போது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை இப்பிறவிக்கு கொண்டுவருகிறோம். முன்ஜென்ம கர்ம வினைப் பயன்களை நாம் இப்பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பது நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது அதை நமக்கு உரைப்பது தான் ஜோதிடம்