விதிக் கோட்பாடுகளும் - விதியை வெல்லும் ஜோதிட சூட்சுமங்களும்
வேதஜோதிடம் பற்றி
ஜோதிடம் - ஒரு வாழ்வியல் கல்வி. எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுவதல்ல ஜோதிடம். மாறாக எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒவ்வொருவரும் அவர்அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படி தான் இப்பிறவியை எடுத்துள்ளோம். நாம் வரும்போது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை இப்பிறவிக்கு கொண்டுவருகிறோம். முன்ஜென்ம கர்ம வினைப் பயன்களை நாம் இப்பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை நமக்கு உணர்த்துவது தான் ஜோதிடம். அதன் மூலம் அந்தப் புரிதல் மூலம் நாம் எப்படி நம்மைக் காத்துக்கொள்ளப் போகிறோம் என்று கூறுவது தான் வேத ஜோதிடம்.
More
ஜோதிடத்தின் மூலம் தனி மனித வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும்.
ஒருவருக்கு தன் தனி மனித வாழ்க்கையில் நிகழும் சுக மற்றும் துக்கங்களுக்கு அவரே முழுப் பொருப்பு ஏற்க முடியும். நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது சான்றோன் வாக்கு மட்டுமல்ல இயற்கைளின் சட்டம் அது தான். நம்முடைய ஆன்மா இயற்கையோடு நிலைப் பெறும் வரை நாம் செய்யும் அனைத்து நல்ல மற்றும் நல்லதல்லாத செயல்கள் மூலம் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். செய்த பாவங்களை மட்டுமல்ல புண்ணியங்களையும் அனுபவித்தாக வேண்டும்.
More